மேலும் செய்திகள்
நாய் மீது பைக் மோதி வாலிபர் உயிரிழப்பு
20-Jun-2025
திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் மாதா கோவில் கிராமத்தைச் சேர்ந்தவர் ஞானதீபம், 70. இவர், நேற்று முன்தினம் மாலை திருவள்ளூர் நான்கு வழிச்சாலை அருகே உள்ள உறவினரை பார்த்துவிட்டு, அதே சாலை வழியாக நடந்து வந்து கொண்டிருந்தார்.அப்போது, திருவள்ளூரில் இருந்து அரக்கோணம் நோக்கி வந்த, 'டி.வி.எஸ்., ஸ்டார் சிட்டி' பைக், மூதாட்டி மீது மோதியது. இதில், தலையில் பலத்த காயமடைந்த ஞானதீபத்தை, அக்கம்பக்கத்தினர் மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்தார். இதுகுறித்து திருவாலங்காடு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
20-Jun-2025