உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  கத்தியை காட்டி பணம் பறிப்பு

 கத்தியை காட்டி பணம் பறிப்பு

திருவாலங்காடு: மணவூரில் கத்தியை காட்டி பணம் பறித்து சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர். திருவாலங்காடைச் சேர்ந்தவர் ராஜா, 38. இவர், நேற்று மணவூர் கிராமத்திற்கு சென்றுவிட்டு, பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தார். மணவூர் ரயில் நிலையம் அருகே வந்தபோது, சாலையில் நடந்து சென்ற நபர் லிப்ட் கேட்டுள்ளார். இதை கண்ட ராஜா பைக்கை நிறுத்தியுள்ளார். அப்போது, மர்ம நபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி ராஜாவிடம், 2,000 ரூபாயை பறித்துவிட்டு தப்பிச் சென்றார். இதுகுறித்த புகாரின்படி, திருவாலங்காடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். இதுதொடர்பாக, போளிவாக்கத்தைச் சேர்ந்த சத்யராஜ், 28, என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை