உழவர் பாதுகாப்பு திட்டம் உறுப்பினர் சேர்க்கை முகாம்
திருவள்ளூர்:உழவர் பாதுகாப்பு திட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் வரும் 12ல் நடக்கிறது.திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:திருவள்ளுர் மாவட்டத்தில் விவசாய தொழிலில் ஈடுபட்டுள்ள குறு, சிறு விவசாயிகள், விவசாய தொழிலாளர் மற்றும் அவரது குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் உழவர் பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இத்திட்டத்தின்கீழ் திருமண உதவி, இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு, விபத்து நிவாரணம், முதியோர் ஓய்வூதியம், மகப்பேறு உதவித்தொகை ஆகிய நலத்திட்ட உதவி வழங்கப்படுகிறது.இத்திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியுள்ள உள்ள அனைவரும் அவரவர் வசித்து வரும் வட்டத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் வரும், 12ம் தேதி சிறப்பு முகாம் நடக்கிறது. அன்றைய தினம், தகுதி வாய்ந்தோர், சிறப்பு முகாமில் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாரிடம் மனு செய்து பயன் பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.