உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / விவசாய கடன்களை தள்ளபடி செய்யக்கோரி பொன்னேரியில் விவசாயிகள் டிராக்டர் பேரணி

விவசாய கடன்களை தள்ளபடி செய்யக்கோரி பொன்னேரியில் விவசாயிகள் டிராக்டர் பேரணி

பொன்னேரி:தமிழக அனைத்து விவசாய ஒருங்கிணைப்பு குழு, சார்பில் நேற்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொன்னேரியில் விவசாயிகளின் டிராக்டர் பேரணி நடந்தது.பொன்னேரி திருவாயற்பாடியில் துவங்கிய பேரணி, அரிஅரன் பஜார், செங்குன்றம் சாலை வழியாக சென்றது. இதில், ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.பேரணியின்போது விவசாயிகள் கூறியதாவது:இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் அடிப்படை நோக்கம் கொண்ட மின்சார ஒழுங்குமுறை ஆணைய சட்டத்தை திரும்ப பெறவேண்டும். நீண்டகாலமாக போராடி வரும் பனை, தென்னை விவசாயிகளுக்கு கள் இறக்கி, விற்பனை செய்வதற்கு மற்ற மாநிலங்களை போல், தமிழக அரசும் அனுமதிக்க வேண்டும்.மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளின் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யவேண்டும். விவசாய நிலங்களை அரசு சார்ந்த துறைகளுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் விவசாயிகளின் அனுமதியில்லாமல் நில எடுப்பு சட்டத்தை பயன்படுத்தி எடுக்கக்கூடாது. குளம், குட்டையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டங்களை அகற்ற வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ