மேலும் செய்திகள்
ரூ.2,000 லஞ்சம் வாங்கிய ஊழியருக்கு '3 ஆண்டு'
21-Aug-2024
திருவள்ளூர்:குடும்ப நல வழக்கில், 'ஜி பே'யில் 1,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய, சமூக நலத்துறையின் தற்காலிக பெண் ஊழியர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.சென்னை பெரம்பூர், ஜி.கே.காலனியைச் சேர்ந்தவர் பால செந்தில்முருகன். இவரது மனைவி சரஸ்வதி. இவர், கடந்த சில மாதங்களுக்கு முன், திருவள்ளூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தில், குடும்ப வன்முறை தடப்புச் சட்டத்தின் கீழ், புகார் தெரிவித்திருந்தார். அப்போது, மனுவின் மீது விசாரணை மேற்கொள்ளாமல், விசாரணை அலுவலர் பொறுப்பில் இருந்த செல்வி என்பவர், 1,000 ரூபாய் லஞ்சம் வாங்கியதாக, பாலசெந்தில்முருகன், கடந்த, மார்ச் 4ல், சென்னை சமூக நலத்துறை அலுவலகத்தில் புகார் அளித்தார்.இந்த புகார் மீது விசாரணை நடத்த, செங்கல்பட்டு சமூக நல அலுவலர் சங்கீதா விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அவரது விசாரணையில், திருவள்ளூர் மாவட்ட சமூக நலத்துறையில் தற்காலிக இளநிலை உதவியாளரான செல்வி, 'ஜி- பே' வாயிலாக, 1,000 ரூபாய் வாங்கியது நிரூபணம் ஆனது; எனவே, அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்குமாறு', மாநில சமூக நலத்துறை அலுவலகத்திற்கு, ஏப்.23ல் அறிக்கை சமர்ப்பித்தார்.இதையடுத்து, தற்காலிக இளநிலை பெண் ஊழியர் செல்வியை, பணி நீக்கம் செய்து, மாநில சமூக நலத்துறை ஆணையர் அமுதவல்லி உத்தரவிட்டார். இதையடுத்து, செல்வி பணி நீக்கம் செய்யப்பட்டார்.
21-Aug-2024