மேலும் செய்திகள்
தீயணைப்பு நிலையத்தில் மாணவர்களுக்கு பயிற்சி
14-Sep-2024
திருத்தணி:திருத்தணி முருகன் மலைக்கோவிலில், தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி திருத்தணி தீயணைப்பு நிலையம் சார்பில் நேற்று நடந்தது. திருத்தணி கோவில் இணை ஆணையர் ரமணி பங்கேற்று ஒத்திகை பயிற்சியை துவக்கி வைத்தார்.தொடர்ந்து, தீயணைப்பு வீரர்கள், மலைக்கோவிலில் பணியாற்றும் கோவில் ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த துப்புரவாளர்கள் ஆகியோருக்கு, தீ விபத்து ஏற்படும் போது, எப்படி தீயை பாதுகாப்புடன் அணைப்பது, தீ மேலும் பரவாமல் முதலில் செய்ய வேண்டிய பணிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து செயல்முறை அளிக்கம் அளித்தனர். கட்டட இடிபாடுகள் மற்றும் கூட்ட நெரிசலில் பக்தர்கள் சிக்கி காயமடைந்தால் அவர்களை எவ்வாறு மீட்டு முதலுதவி அளிப்பது குறித்தும் தீயணைப்பு வீரர்கள் செய்து காண்பித்தனர்.தொடர்ந்து கோவில் ஊழியர்கள் தீயை எவ்வாறு அணைப்பது என்பது குறித்து தீயணைப்பு வீரர்கள் முன்னிலையில் செய்து காண்பித்தனர்.
14-Sep-2024