உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பறக்கும் சவுடு மண் லாரிகள் வாகன ஓட்டிகள் திக்... திக்

பறக்கும் சவுடு மண் லாரிகள் வாகன ஓட்டிகள் திக்... திக்

திருவாலங்காடு:திருவாலங்காடு சாலையில் சவுடு மண் ஏற்றி செல்லும் டிப்பர் லாரிகள் தார்ப்பாய் மூடாமலும், அதிவேகமாக இயக்கப்படுவதாலும் விபத்து அபாயம் உள்ளதாக வாகன ஓட்டிகள் புலம்புகின்றனர்.திருவள்ளூர் அடுத்த பட்டரைப்பெரும்புதுார் பகுதியில் குவாரி அமைத்து, சவுடு மண் எடுக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், டிப்பர் லாரிகளில் சவுடு மண்ணை அளவுக்கு அதிகமாக ஏற்றி செல்கின்றனர்.இந்த டிப்பர் லாரிகள், திருவள்ளூர் -- அரக்கோணம் சாலை மற்றும் கனகம்மாசத்திரம் -- தக்கோலம் சாலையில், திருவாலங்காடு, சின்னம்மாபேட்டை உட்பட பல கிராமங்களின் வழியாக செல்கின்றன.தார்ப்பாய் மூடாமல், அசுர வேகத்தில் செல்லும் லாரிகளால், மண் துகள்கள், வாகன ஓட்டிகளின் கண்களில் விழுகின்றன. மேலும், கிராமப்புற சாலைகளில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே, டிப்பர் லாரிகளில் தார்ப்பாய் போட்டு, மண் துகள் காற்றில் பறக்காதபடி எடுத்து செல்லவும், வேகத்தை குறைத்து லாரியை இயக்கவும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை