உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / போலீஸ் வாகனம் மோதி முன்னாள் தலைமையாசிரியர் பலி

போலீஸ் வாகனம் மோதி முன்னாள் தலைமையாசிரியர் பலி

திருத்தணி;ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் நடைபயிற்சிக்கு சென்று வீட்டிற்கு திரும்பி வரும் போது, போலீஸ் வாகனம் மோதி பலியானார். திருத்தணி பழைய தர்மராஜாகோவில் தெருவைச் சேர்ந்தவர் ஸ்ரீராமுலு, 84; ஓய்வு பெற்ற தலைமையாசிரியர். இவர், நேற்று காலை 7:30 மணிக்கு நடைபயிற்சி முடித்துக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அதே தெருவில் வசிக் கும், திருத்தணி போலீஸ் இன்ஸ்பெக்டர் மதிய ரசனை அழைத்து செல்வதற்காக, தலைமை காவலர் அமரன், 50, 'பொலீரோ' போலீஸ் வாகனத்தை ஓட்டி வந்தார். வாகனத்தை திருப்புவதற்காக பின்னால் எடுத்த போது, ஸ்ரீராமுலு மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்தவரை திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ