தம்பதியை தாக்கிய நால்வருக்கு வலை
திருத்தணி:திருத்தணி ஒன்றியம், இ.என்.கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் அருள் மனைவி அமுலு, 33; இவருக்கும் எதிர் வீட்டில் வசிக்கும் பிரவீன், 38, என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.நேற்று முன்தினம், அமுலு தெருவில் நின்றுக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த பிரவீன், அவரது பெற்றோர் சரசா, தேவேந்தின் மற்றும் உறவினர் ரோஜா ஆகிய நால்வரும், உருட்டை கட்டையால் அமுலுவை தாக்கினர்.இதை தடுக்க வந்த அமுலு கணவர் அருளையும் தாக்கிவிட்டு சென்றனர்.இதில் படுகாயடைந்த தம்பதியினர், திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து, மேற்கண்ட நால்வரை தேடி வருகின்றனர்.