மேலும் செய்திகள்
போதையில் மோதல் 5 பேர் படுகாயம்
21-Jan-2025
திருத்தணி:திருத்தணி அடுத்த, தும்பிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணி, 69; இவருக்கும் அதே கிராமத்தில் வசிக்கும் இவருடைய தம்பி ஜெகநாதன் என்பவரது குடும்பத்திற்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.இரண்டு நாட்களுக்கு முன் பெய்த கனமழையால் சுப்ரமணியின் நெற்பயிரில் மழை தண்ணீர் தேங்கியிருந்தது. இந்த தண்ணீரை வெளியேற்றுவதற்காக சுப்ரமணி நேற்று முன்தினம், தம்பி நிலத்தின் வழியாக கால்வாய் அமைத்தார்.இதனால், ஆத்திரமடைந்த ஜெகநாதனின் மனைவி தர்மவேணி மற்றும் அவரது மகன் செந்தில்குமார் ஆகியோர் சுப்ரமணியிடம் தகராறு செய்தனர். தொடர்ந்து இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.இதில், சுப்ரமணி, அவரது மனைவி மணி, தம்பியின் மனைவி தர்மவேணி, மகன் செந்தில்குமார் ஆகிய நால்வரும் காயம் அடைந்தனர். இவர்கள், திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதுகுறித்து இரு தரப்பினர் கொடுத்த புகாரையடுத்து, திருத்தணி போலீசார் மேற்கண்ட நான்கு பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
21-Jan-2025