உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கொதிக்கும் எண்ணெய் தெறித்து நான்கு வயது சிறுவன் படுகாயம்

கொதிக்கும் எண்ணெய் தெறித்து நான்கு வயது சிறுவன் படுகாயம்

திருத்தணி, திருத்தணி, குமாரகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் அசோகன் மகன் கிரண்சாய், 4. நேற்று, அசோகனின் மனைவி வீட்டில் சமையல் செய்து விட்டு, அப்பளம் பொறித்த கொதிக்கும் எண்ணெய்யை கீழே இறக்கி வைத்துள்ளார்.அப்போது, வீட்டில் விளையாடி கொண்டிருந்த குழந்தை, அப்பளத்தை எடுக்க ஓடிய போது, தவறுதலாக எண்ணெய் பாத்திரம் மீது கைபட்டதில், கொதிக்கும் எண்ணெய் குழந்தையின் உடலில் தெறித்தது.இதில், படுகாயமடைந்த குழந்தையை பெற்றோர்கள் மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து திருத்தணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ