மேலும் செய்திகள்
மதுபாட்டில் கடத்தல் 2 பேர் கைது
07-Sep-2025
கும்மிடிப்பூண்டி:முப்பையில் இருந்து போதை மாத்திரைகளை கடத்திய நான்கு வாலிபர்களை, போலீசார் கைது செய்தனர். கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் சோதனைச்சாவடியில் நேற்று, போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சோதனைச்சாவடியை நடந்தபடி கடக்க முயன்ற நான்கு வாலிபர்களை போலீசார் விசாரித்தனர். முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால், நான்கு பேரின் உடைமைகளை போலீசார் சோதனையிட்டனர். அவர்களிடம், 2,138 போதை மாத்திரைகள் மற்றும் 35 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், சென்னை ஆவடியை சேர்ந்த யாகேஷ், 27, அம்பத்துார் ஜெகன், 24, ராயபுரம் மோனிஷ், 22, மதுரவாயல் ரஞ்ஜித்குமார், 24, என்பது தெரியவந்தது. முதல்கட்ட விசாரணையில், மும்பையில் இருந்து கடத்தியது தெரியவந்தது. வழக்கு பதிந்த கும்மிடிப்பூண்டி கலால் போலீசார் நான்கு பேரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.
07-Sep-2025