உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பஞ்சாட்சர மலையில் பவுர்ணமி கிரிவலம்

பஞ்சாட்சர மலையில் பவுர்ணமி கிரிவலம்

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை அடுத்த ஸ்ரீகாளிகாபுரம் கிராமத்தின் தென்மேற்கில் பஞ்சாட்சரமலை அமைந்துள்ளது. இந்த மலை உச்சியில், 700 ஆண்டுகள் பழமையான மரகதேஸ்வரர் அருள்பாலித்து வருகிறார். பிரத்யேக கோவில் இன்றி, மலை உச்சியில் மூலவர் அருள்பாலித்து வருகிறார். பக்தர்களே இந்த சுவாமிக்கு அபிஷேகம் செய்கின்றனர்.பிரதோஷம், சோமவார பூஜை, பவுர்ணமி சிறப்பு வழிபாடு உள்ளிட்டவை இங்கு நடத்தப்பட்டு வருகிறது. பவுர்ணமியை ஒட்டி, நேற்று மாலை மரகதேஸ்வரருக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.அதை தொடர்ந்து, மலர் அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். பின், பஞ்சாட்சர மலையில் இருந்து அணையா ஜோதியுடன் புறப்பட்ட திரளான சிவனடியார்கள், பந்திகுப்பம், சேதுவராகபுரம் வழியாக கிரிவலம் வந்தனர். கிரிவல பாதையில், திரளான பக்தர்கள் இணைந்து வலம் வந்தனர்.இதில், ஸ்ரீகாளிகாபுரம், சோளிங்கர், ஆர்.கே.பேட்டை உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !