உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கோவில், பள்ளி அருகே குப்பை ஊராட்சி நிர்வாகம் பாராமுகம்

கோவில், பள்ளி அருகே குப்பை ஊராட்சி நிர்வாகம் பாராமுகம்

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஸ்ரீகாளிகாபுரம் ஊராட்சி, அதிக மக்கள் தொகை கொண்ட ஊராட்சிகளில் ஒன்றாக விளங்குகிறது. இங்கு, 15,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியின் திடக்கழிவு மேலாண்மை மற்றும் கழிவுநீர் அகற்றம் உள்ளிட்ட அடிப்படை சுகாதார வசதிகளில் உள்ளாட்சி நிர்வாகம் உரிய கவனம் செலுத்தாமல் உள்ளது.கிராமத்தின் நடுவே பாயும் நீர்வரத்து கால்வாய், கழிவுநீர் கால்வாயாக மாறியுள்ளது. மேலும், செடி, கொடிகள் வளர்ந்துள்ளது. விநாயகர் கோவில் எதிரேயும், அரசு மேல்நிலைப் பள்ளி அருகேயும் குப்பை கொட்டப்பட்டு வருகிறது.இதனால், கிராமத்தின் சுகாதாரம் பாதிக்கப்படும் அபாய ஏற்பட்டுள்ளது. எனவே, ஸ்ரீகாளிகாபுரம் ஊராட்சியில், அடிப்படை சுகாதார வசதிகளை முறையாக செயல்படுத்த வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !