உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / குரூப் – 1 எழுத்து தேர்வு 1,284 பேர் ‘ஆப்சென்ட்’

குரூப் – 1 எழுத்து தேர்வு 1,284 பேர் ‘ஆப்சென்ட்’

திருவளளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில், நேற்று நடந்த குரூப் – 1 முதல் நிலை எழுத்து தேர்வில், 1,284 பேர் தேர்வு பங்கேற்கவில்லை. திருவள்ளூர் மாவட்டத்தில், 12 மையங்களில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் – -1 முதல் நிலை எழுத்து தேர்வு நேற்று நடந்தது. மாற்றுத்திறனாளிகளுக்கு தரைத்தளத்தில் தேர்வு எழுத வசதியும், பார்வையற்றோர் தேர்வு எழுத வசதியாக மாற்று நபர் கொண்ட தனி அறைகளும், ஒவ்வொரு தேர்வுக்கூடத்திலும் அமைக்கப்பட்டிருந்தன. இதற்கு விண்ணப்பித்த 4,038 தேர்வர்களில், 2,754 பேர் தேர்வு எழுதினர். 1,284 பேர் தேர்வு எழுத வரவில்லை. நேற்று நடந்த தேர்வில், 12 தலைமை கண்காணிப்பாளர்கள், மூன்று இயக்கக் குழு அலுவலர்கள், ஒரு பறக்கும் படை குழு மற்றும் 12 ஆய்வு அலுவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !