திருவாலங்காடில் நோயாளிகளிடம் கேட்டறிந்த சுகாதார அலுவலர்
திருவாலங்காடு:திருவாலங்காடில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், மாவட்ட சுகாதார அலுவலர் பிரியா ராஜ் ஆய்வு செய்தார்.அப்போது, மருந்துகள், ஊழியர்களின் வருகை, மற்றும் அளிக்கப்படும் சிகிச்சை விபரங்கள், தேவையான மருந்துகள் அதன் தேவைகள், வைரஸ் காய்ச்சல் தொடர்பான சிகிச்சைகள் மற்றும் மருத்துவமனையில் நோயாளிகள் புகார் தெரிவிக்க புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து கேட்டறிந்தார்.பின், காய்ச்சல் வார்டு, பிரசவ வார்டுகளுக்குச் சென்று ஆய்வு செய்த பிரியா ராஜ், முறையான சிகிச்சை அளிக்கப்படுகிறதா என நோயாளிகளிடம் கேட்டறிந்தார்.ஆய்வின்போது, வட்டார மருத்துவ அலுவலர் பிரகலாதன், மருத்துவர்கள், செவிலியர்கள் உடனிருந்தனர்.