மேலும் செய்திகள்
பெண் மீது தாக்குதல் மூன்று பேருக்கு வலை
31-Jan-2025
திருத்தணி:திருத்தணி ஒன்றியம், தெக்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வாஞ்சிநாதன், 23. கூலி தொழிலாளி. இவரும், அதே பகுதியைச் சேர்ந்த கல்லுாரி மாணவி கவிதா, 19, என்பவரும், காதலித்து வந்தனர்.இந்நிலையில், பெற்றோர் எதிர்ப்பை மீறி, பத்து நாட்களுக்கு முன், வாஞ்சிநாதனும், கவிதாவும், ஆந்திர மாநிலம், நகரி தேசம்மன் கோவிலில் திருமணம் செய்துக் கொண்டு அதே பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.இது குறித்து தகவல் அறிந்ததும், கவிதாவின் பெற்றோர், மூன்று நாட்களுக்கு முன், நகரிக்கு சென்று, கவிதாவை வலுகட்டயமாக தெக்களூரில் உள்ள வீட்டிற்கு அழைத்து வந்ததாக கூறப்படுகிறது.இதனால், வாஞ்சிநாதனை பிரிந்த ஏக்கத்தில் இருந்த கவிதா நேற்று முன்தினம் காலையில் வீட்டில் மின்விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து, திருமணமாகி பத்து நாட்களே ஆகியுள்ளதால், வருவாய் கோட்டாட்சியர் தீபாவின் விசாரணைக்கு கடிதம் அனுப்பினர்.கோட்டாட்சியர் தற்கொலை தொடர்பாக கவிதாவின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
31-Jan-2025