உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வெளிமாநில தொழிலாளர்களிடம் ஆவணங்கள் பெறுவது அவசியம்

வெளிமாநில தொழிலாளர்களிடம் ஆவணங்கள் பெறுவது அவசியம்

திருவாலங்காடு,:திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி, பள்ளிப்பட்டு, திருவள்ளூர், பூந்தமல்லி, பொன்னேரி உட்பட ஒன்பது தாலுகாக்களில், ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. சில தொழிற்சாலைகளில் சம்பள பிரச்னை உட்பட பல்வேறு காரணங்களால், பலரும் குறைந்த சம்பளம் காரணமாக பணியாற்ற விரும்பவில்லை.இந்நிலையில், தனியார் தொழிற்சாலைகள், தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்க, அசாம், பீகார், ஜார்க்கண்ட், மஹாராஷ்டிரா உள்ளிட்ட வெளிமாநில தொழிலாளர்களை அழைத்து வந்து, ஒப்பந்த அடிப்படையில் பணியில் ஈடுபடுத்தி வருகின்றனர்.தற்போது, திருவாலங்காடு, கடம்பத்தூர், திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில், 15,000க்கும் மேற்பட்ட வெளிமாநில தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். ஆனால், பெரும்பாலான எஸ்டேட் நிர்வாகங்கள், அவர்களிடம் உரிய ஆவணங்கள் பெறாமல் பணி வழங்கியுள்ளனர்.இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட காவல் அதிகாரி கூறியதாவது:தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வேலை தேடி வரும் வெளிமாநில தொழிலாளர்கள், சில நேரங்களில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுகின்றனர்.இதை தடுக்கும் வகையில், தொழிற்சாலை மற்றும் பண்ணை விவசாய நிலங்களில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தும் முன் புகைப்படம், ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை நகல் பெற்று, அந்தந்த பகுதி காவல் நிலையங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.எந்த ஆவணமும் இல்லாமல், வெளிமாநில தொழிலாளர்களை பணியில் அமர்த்த கூடாது. போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே குற்ற சம்பவங்களை தடுக்க முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி