110 இளம் வீரர்களுக்கு கராத்தே பெல்ட் வழங்கல்
சென்னை, பள்ளிக்கரணை அடுத்த மேடவாக்கத்தில் 'அஜய் ஆட்ஸ் ஆப் வேர்ல்ட்' கராத்தே பயிற்சியகம் இயங்கி வருகிறது. இங்கு 'சென்கோன் இஷின் ரியூ கராத்தே கொபுடோ' பிரிவில், கராத்தே பயிற்சி அளிக்கப்படுகிறது.இதே பிரிவில், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் பயிற்சி முடித்த 4 முதல் 18 வயது நிரம்பிய மாணவர்களுக்கு, ஆறு வகையான தகுதிப் போட்டிகள், வயது மற்றும் பிரிவின்படி நடத்தப்பட்டன.இப்போட்டிகளில் வெற்றி பெற்ற 110 வீரர்களுக்கும், வயது மற்றும் பிரிவின்படி 'பெல்ட்' வழங்கும் நிகழ்ச்சி, பள்ளிக்கரணை, நீலாம்பாள் மண்டபத்தில் நேற்று காலை நடந்தது.அதன்படி கருப்பு பெல்ட் 12 வீரர்களுக்கும், மஞ்சள், நீலம், பச்சை, பர்பிள், பிரவுன் ஆகிய பெல்டுகள், 98 வீரர்களுக்கும் வழங்கப்பட்டன.தவிர, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பயிற்சி சான்றிதழ், கோப்பை, கேடயம் வழங்கப்பட்டது.இந்திய ராணுவத்தில் வீரமரணம் அடைந்த மேஜர் முகுந்தின் தந்தை வரதராஜன், சித்தப்பா மணிக்கூடம் நிறுவனர் திருஞானம், ஊடகவியலாளர் சாந்தகுமார், ஏழாம் நிலை பயிற்சியாளர் அஜய் பெருமாள் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.