மேலும் செய்திகள்
வாலிபர் மாயம்
28-Mar-2025
கனகம்மாசத்திரம்:திருவாலங்காடு ஒன்றியம் காஞ்சிப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயன், 54. இவருக்கு, அதே கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சிவலிங்கம், 17 லட்சம் ரூபாயும், காளிதாஸ், 3 லட்சம் ரூபாயும் என, மொத்தம் 20 லட்சம் ரூபாய் கடனாக கொடுத்துள்ளனர்.நேற்று மாலை சிவலிங்கம், காளிதாஸ் ஆகியோரின் சார்பில், உறவினரான வழக்கறிஞர் சதீஷ்குமார், 31, என்பவர், கனகம்மாசத்திரம் பஜாரில் இருந்த விஜயனிடம், பணத்தை திருப்பி கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.இதை தொடர்ந்து விஜயன், அவரது ஆதரவாளர்கள் அரி, ஆனந்தன், ஜி.டி.மணி ஆகியோர், வழக்கறிஞரை நடுரோட்டில் தாக்கினர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் பரவியது. இதுகுறித்து, சதீஷ்குமார், கனகம்மாசத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கு பதிந்த போலீசார் விசாரிக்கின்றனர்.
28-Mar-2025