உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மாடியில் இருந்து தவறி விழுந்தவர் உயிரிழப்பு

மாடியில் இருந்து தவறி விழுந்தவர் உயிரிழப்பு

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அருகே, மொட்டை மாடியில் இருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்தவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கும்மிடிப்பூண்டி அடுத்த புதுகும்மிடிப்பூண்டி, பாலயோகி நகரில் வசித்தவர் தேவராஜ், 55. இம்மாதம், 11ம் தேதி, வீட்டு மொட்டை மாடியில் இருந்து கால் தடுமாறி கீழே விழுந்தார். படுகாயம் அடைந்த அவர், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்தார். கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !