உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வரும் 9ல் மக்கள் தொடர்பு திட்ட முகாம்

வரும் 9ல் மக்கள் தொடர்பு திட்ட முகாம்

திருவள்ளூர்:ஆவடி வட்டம், கொசவன்பளையம் கிராமத்தில், வரும் 9ம் தேதி, மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற உள்ளதாக, திருவள்ளூர் கலெக்டர் கவிதா தெரிவித்துள்ளார். திருவள்ளூர் கலெக்டர் கவிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: திருவள்ளூர் மாவட்டம், ஆவடி வட்டம், கொசவன்பளையம் கிராமத்தில், வரும் 9ம் தேதி காலை 10:00 மணியளவில், கலெக்டர் தலைமையில், மக்கள் தொடர்பு திட்டம் முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில், அனைத்து துறைகளைச் சார்ந்த, மாவட்ட அளவிலான அலுவலர்கள் பங்கேற்க உள்ளனர். எனவே, பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பாக, கலெக்டரிடம் மனுக்கள் அளித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை