சாலையில் ஓடும் கழிவுநீர் ஆபத்தில் வாகன ஓட்டிகள்
மப்பேடு:கடம்பத்துார் ஒன்றியம், மப்பேடு ஊராட்சி பகுதியில் உள்ள தண்டலம் - அரக்கோணம் நெடுஞ்சாலையில், தினமும், 25,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.இப்பகுதியில், கழிவுநீர் கால்வாய் இல்லாததால், வணிக நிறுவனங்களிலிருந்து வெளியேறும் கழிவுநீர், நெடுஞ்சாலையில் ஆறு போல வழிந்தோடுகிறது.இதனால், வாகனங்களில் செல்வோர் துர்நாற்றத்தால் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, இரு சக்கர வாகனங்கள் மற்றும் நடந்து செல்லும் பகுதிவாசிகள் சிரமப்பட்டு வருவதோடு, தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மப்பேடு ஊராட்சியில் ஆய்வு செய்து, கழிவுநீர் கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.