உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மீஞ்சூரில் மீடியன்கள் சீரமைக்க வாகன ஓட்டிகள் எதிர்ப்பார்ப்பு

மீஞ்சூரில் மீடியன்கள் சீரமைக்க வாகன ஓட்டிகள் எதிர்ப்பார்ப்பு

மீஞ்சூர்:மீஞ்சூர் - மணலி சாலையில் வாகன விபத்துக்களை தவிர்க்க கான்கிரீட் மீடியன்கள் அமைக்கப்பட்டு உள்ளன. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வீசிய, 'மிக்ஜாம்' புயல் மழையின்போது, இந்த சாலையின் அருகில் உள்ள கொண்டக்கரை, வெள்ளிவாயல்சாவடி, சுப்பாரெட்டிப்பாளையம் ஆகிய கிராமங்களில் மழைநீர் சூழ்ந்தது.சாலையிலும், இரண்டு அடி உயரத்திற்கு மழைநீர் தேங்கி போக்குவரத்தும் பாதித்தது. மீடியன்களால் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு மழைநீர் செல்வதில் தடை ஏற்பட்டது.அதையடுத்து மழைநீரை வெளியேறுவதற்காக மேற்கண்ட பகுதிகளில் இருந்த மீடியன்கள் ஆங்காங்கே பொக்லைன் உதவியுடன் உடைக்கப்பட்டன.இவை உடைக்கப்பட்டு ஓராண்டு ஆகும் நிலையில், இதுவரை சீரமைக்கப்படாமல் உள்ளன. உடைந்த கான்கிரீட் கட்டுமானங்களும் அங்கிருந்து அகற்றப்படாமல் வாகன ஓட்டிகளுக்கு இடையூறும் ஏற்படுத்த வருகின்றன.இதனால் வாகன ஓட்டிகள் தடுமாற்றம் அடைவதுடன், விபத்துக்களில் சிக்கும் அபாயம் உள்ளது. அசம்பாவிதங்களை தவிர்க்க, மீடியன்களை சீரமைக்க வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ