உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தீப்பிடித்த காரால் இடையூறு வாகன ஓட்டிகள் தடுமாற்றம்

தீப்பிடித்த காரால் இடையூறு வாகன ஓட்டிகள் தடுமாற்றம்

சோழவரம், சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன. இருபுறமும், தலா மூன்று என, ஆறு வழித்தடங்கள் உள்ள நிலையில், வாகனங்கள் அசுர வேகத்தில் ஒன்றையொன்று முந்திக்கொண்டு பயணிக்கின்றன.கடந்த மாதம் 30ம் தேதி, சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி சென்ற 'ரொனால்ட் ட்ரைபர்' கார், சோழவரம் டோல்கேட்டை கடந்து சிறிது துாரம் சென்றபோது, திடீரென தீப்பிடித்து எரிந்தது.இந்த விபத்தில் யாருக்கும் காயம் இல்லை. தீயணைப்பு வாகனத்தின் உதவியுடன் தீ அணைக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் காரின் முன்பகுதி டயர் மற்றும் உதிரி பாகங்கள் தீயில் எரிந்து சேதமானது. இந்லையில், சேதமான கார் அங்கிருந்து அப்புறப்படுத்தப்படாமல், அதே இடத்தில் ஆறு நாட்களாக உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் பயணித்து வருகின்றனர்.தேசிய நெடுஞ்சாலையில் முன்னால் செல்லும் வாகனங்களை முந்துவதற்காக வேகமாக பயணிக்கும் வாகனங்கள், தீ விபத்தில் சிக்கிய காரின் மீது மோதி விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. இரவு நேரங்களில் பயணிக்கும் வாகன ஓட்டிகள், கார் இருப்பதை அருகில் வந்து கவனித்து நிலை தடுமாறுகின்றனர்.எனவே, ஏதேனும் அசம்பாவிதங்கள் நேரிடும் முன், உடனடியாக தீ விபத்தில் சிக்கிய காரை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து அப்புறப்படுத்த போக்குவரத்து போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை