உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பாசி படர்ந்து, கழிவுநீர் கலந்துள்ள நந்தியம்பாக்கம் கோவில் குளம்

பாசி படர்ந்து, கழிவுநீர் கலந்துள்ள நந்தியம்பாக்கம் கோவில் குளம்

மீஞ்சூர்:மீஞ்சூர் அடுத்த, நந்தியம்பாக்கம் பகுதியில், விநாயகர் கோவில் பின்புறம் உள்ள குளம் பராமரிப்பு இன்றி கிடக்கிறது. இது, நந்தியம்பாக்கம் - கொள்ளட்டீ சாலையை ஓட்டி இருப்பதால், குப்பை கழிவு இங்கு வந்து குவிகிறது.மேலும், குளத்தை சுற்றிலும் உள்ள குடியிருப்புகளின் கழிவுநீரும் கலந்து குளம் பாழாகிறது. தற்போது, குளம் முழுதும் பாசிபடிந்து உள்ளது.கோவில் குளம் பராமரிப்பு இன்றி கிடப்பது, கோவிலுக்கு வரும் பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.குளத்தை சுத்தப்படுத்தி, சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்கவும், படித்துறைகள் ஏற்படுத்திடவும் வேண்டும் எனவும், அவ்வப்போது பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை