உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருத்தணி குமரன் நகருக்கு தார்ச்சாலை வசதி கோரி மனு

திருத்தணி குமரன் நகருக்கு தார்ச்சாலை வசதி கோரி மனு

திருத்தணி,:திருத்தணி நகராட்சி, 5வது வார்டு குமரன் நகர் பகுதியில், 100க்கும் மேற்பட்டோர் வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர். இவர்கள் தங்கள் பகுதியில் இருந்து பழைய மற்றும் புதிய சென்னை பிரதான சாலைக்கு செல்வதற்கு மண்சாலை மட்டுமே உள்ளது.இச்சாலை மழை பெய்யும் போது சகதியாக மாறி விடுவதால், இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்பவர்கள் கடும் சிரமப்படுகின்றனர்.இதையடுத்து, நேற்று, குமரன் நகர் பகுதியைச் சேர்ந்த பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் திருத்தணி நகராட்சி அலுவலகத்திற்கு வந்து நகராட்சி தலைவர் சரஸ்வதி மற்றும் ஆணையர் அருள் ஆகியோரிடம் மண்சாலையை தார்ச்சாலையாக மாற்றித்தர வேண்டும் என கோரிக்கை வைத்து மனு கொடுத்தனர்.மனுவை பெற்ற நகராட்சி தலைவர் சரஸ்வதி, ஆணையர் அருள் ஆகியோர் உங்கள் மனு மீது நடவடிக்கை எடுத்து, வருவாய் துறை அனுமதி பெற்று தார்ச்சாலை அமைக்கப்படும் என, உறுதி அளித்தனர். அப்போது நகராட்சி கவுன்சிலர் லோகநாதன் உடனிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ