ம் பழைய நீதிமன்ற வளாகத்தில் பூக்கடைக்காரர்கள் ஆக்கிரமிப்பு
திருவள்ளூர்,திருவள்ளூர் ஜே.என்.சாலையில் உள்ள பழைய நீதிமன்ற வளாகத்தில், பூக்கடைக்காரர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.திருவள்ளூர் ஜே.என்.சாலையில், உழவர் சந்தை அருகில் மகளிர் விரைவு நீதிமன்றம், நீதிபதிகள் குடியிருப்பு இயங்கி வந்தன. கடந்த 10 ஆண்டுக்கு முன் கலெக்டர் அலுவலகம் அருகில், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது. மேலும், நீதிபதிகள் குடியிருப்பும் அந்த வளாகத்திலேயே தனியாக கட்டப்பட்டுள்ளது.இதையடுத்து, ஜே.என்.சாலை உழவர் சந்தை அருகே உள்ள நீதிமன்ற வளாகம் செயல்படாமல் மூடி கிடக்கிறது. இந்த நிலையில், உழவர் சந்தை அருகே உள்ள சாலையோரம், பூக்கடைக்காரர்கள் ஆக்கிரமிப்பு செய்து பூ, மாலை விற்பனை செய்து வருகின்றனர்.இதற்காக சில வியாபாரிகள், பழைய நீதிமன்ற வளாகத்தில் ஆக்கிரமிப்பு செய்து, அங்கு பூ மாலை கட்டி வருகின்றனர். அதன்பின், சாலையோர கடைகளில் வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.இதனால், அங்குள்ள பிற பூ வியாபாரிகளும் படிப்படியாக பழைய நீதிமன்ற வளாகத்திற்குள் ஆக்கிரமிப்பு செய்ய வாய்ப்புள்ளதாக, சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர். அதற்குள், ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.