மேலும் செய்திகள்
சிறுமியிடம் அத்துமீறல்; சிக்கியவருக்கு மொத்து
03-Jul-2025
ஆவடி:நான்கு வயது சிறுமியிடம், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.ஆவடி காவல் மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதி இருவரும் ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு மூன்று மகள்கள்.குழந்தைகளை கவனித்து கொள்ள, அதே பகுதியைச் சேர்ந்த செல்வி, 45, என்பவரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை செல்வியின் தம்பி செந்தில் குமார், 39, என்பவர், தம்பதியின் 4 வயது மகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.அன்று இரவு, குழந்தையின் உடலில் காயங்கள் இருப்பதை கண்ட பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து விசாரித்ததில், செந்தில்குமார் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. சிறுமியின் தந்தை, அந்த நபரை சரமாரியாக தாக்கி, பட்டாபிராம் மகளிர் போலீசில் ஒப்படைத்தார்.விசாரித்த போலீசார், செந்தில்குமாரை போக்சோவில் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
03-Jul-2025