உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / புயலில் சேதமான 133 வீடுகளுக்கு நிவாரணம் பொன்னேரி நகராட்சியில் நிதி ஒதுக்கி தீர்மானம்

புயலில் சேதமான 133 வீடுகளுக்கு நிவாரணம் பொன்னேரி நகராட்சியில் நிதி ஒதுக்கி தீர்மானம்

பொன்னேரி:பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், 2023ம் ஆண்டு, 'மிக்ஜாம்' புயல் மழையின்போது, ஏராளமான வீடுகள் முழுதுமாகவும், பகுதியாகவும் சேதம் அடைந்தன.அவற்றை சீரைமக்க நிவாரணம் வழங்க, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.அதன்படி பொன்னேரி நகராட்சியில், பகுதியாக பாதிக்கப்பட்ட, 121 வீடுகளுக்கு தலா, இரண்டு லட்சம் ரூபாயும், முழுமையாக பாதிக்கப்பட்ட, 12 வீடுகளுக்கு, தலா, நான்கு லட்சம் ரூபாய் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதற்கான தொகை தமிழக அரசின் பேரிடர் மேலாண்மை நிதியின் வாயிலாக நகராட்சி நிர்வாகத்திற்கு தரப்படாத நிலையில், வீடுகளை இழந்தவர்கள் பாதிப்பிற்கு உள்ளாகினர்.அதை தொடர்ந்து, பொன்னேரி நகராட்சி பொதுநிதியில் இருந்து, சேதமடைந்த 133 வீடுகளுக்கு, 2.90 கோடி ரூபாய் நிதியை வழங்குவது எனவும், அரசிடம் இருந்து, பேரிடர் மேலாண்மை நிதி பெறப்பட்ட பின், அதை நகராட்சி பொதுநிதிக்கு மாற்றம் செய்வது என, நேற்று முன்தினம் நடந்த நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இதன் வாயிலாக, 'மிக்ஜாம்' புயலில் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு, ஓராண்டுக்கு பின், விமோசனம் கிடைத்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !