உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பல்லாங்குழியான சாலை வாகன ஓட்டிகள் அவதி

பல்லாங்குழியான சாலை வாகன ஓட்டிகள் அவதி

திருமழிசை:சென்னை மதுரவாயல் முதல் வாலாஜா வரையிலான 98 கி.மீ., சாலை, 2014-ம் ஆண்டு ஆறு வழிச்சாலையாக விரிவாக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டு, ஒப்பந்தங்கள் விடப்பட்டு, 2018-ம் ஆண்டின் இறுதியில் பணிகள் துவங்கப்பட்டு நடந்து வருகிறது.இதில், திருமழிசை சிப்காட் பகுதியிலிருந்து நசரத்பேட்டை வரை வரும் இணைப்பு சாலை, சில இடங்களில் சேதமடைந்து பல்லாங்குழியாக மாறியுள்ளது. குறிப்பாக, திருமழிசை பகுதியில் இணைப்பு சாலை பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்து, தண்ணீர் விற்பனை செய்து வரும் பகுதியில் சாலை மிகவும் சேதமடைந்து பல்லாங்குழியாக மாறியுள்ளது. இதனால், இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, இரவு நேரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, இணைப்பு சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை