உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஊட்டச்சத்து பெட்டகம் கர்ப்பிணியருக்கு வழங்கல்

ஊட்டச்சத்து பெட்டகம் கர்ப்பிணியருக்கு வழங்கல்

ஊத்துக்கோட்டை:திருவள்ளூர் ஐ.ஆர்.சி.டி.எஸ்., தொண்டு நிறுவனம், சுகாதாரத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் உள்ளிட்டவை இணைந்து, கச்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில், 100 கர்ப்பிணியர் மற்றும் பாலுாட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து தொகுப்பு பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பூண்டி வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் காயத்ரி, கச்சூர் மருத்துவர் ரம்யா, ஐ.ஆர்.சி.டி.எஸ்., தொண்டு நிறுவன இயக்குனர் ஸ்டீபன் ஆகியோர் பங்கேற்றனர். இதில், மருத்துவர்கள் பேசுகையில், 'கருவுற்ற பின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். சத்தான உணவு உண்பதுடன், மருத்துவர்களின் ஆலோசனை கேட்டு செயல்பட வேண்டும். குழந்தை பிறந்த பின், ஆறு மாதங்கள் தாய்ப்பால் கட்டாயம் கொடுக்க வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை