உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கொளத்துாரில் 11ம் தேதி மக்கள் தொடர்பு முகாம்

கொளத்துாரில் 11ம் தேதி மக்கள் தொடர்பு முகாம்

திருவள்ளூர்:பள்ளிப்பட்டு வட்டம் கொளத்துாரில், வரும் 11ம் தேதி மக்கள் தொடர்பு முகாம் நடக்கிறது.திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:திருவள்ளுர் மாவட்டம், பள்ளிப்பட்டு வட்டம் கொளத்துார் கிராமத்தில் உள்ள சார் - பதிவாளர் அலுவலகம் அருகே, வரும் 11ம் தேதி காலை 10:00 மணியளவில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற உள்ளது.கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ள முகாமில், அனைத்து துறையைச் சார்ந்த மாவட்ட அளவிலான அலுவலர்கள் பங்கேற்க உள்ளனர். எனவே, கிராமவாசிகள் தங்களது குறைகள் மற்றும் கோரிக்கையை மனுக்களாக அளித்து பயன்பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ