உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மக்கள் தொடர்பு முகாம் ரூ.1.94 கோடியில் நலதிட்டம்

மக்கள் தொடர்பு முகாம் ரூ.1.94 கோடியில் நலதிட்டம்

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் கிராமத்தில், மக்கள் தொடர்பு திட்ட முகாம் நேற்று நடந்தது. சாமிரெட்டிகண்டிகை பகுதியில் நடந்த முகாமில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், கும்மிடிப்பூண்டி தி.மு.க., எம்.எல்.ஏ., கோவிந்தராஜன், தாசில்தார் சரவணகுமாரி ஆகியோர் பங்கேற்றனர்.முகாமில், அரசு துறைகள் சார்ந்த திட்டங்கள், அதை பெறுவது குறித்து சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்கள், மக்களுக்கு விளக்கி கூறினர்.இலவச வீட்டு மனை பட்டா, விதவை மகள் திருமண நிதி உதவி, வேளாண் திட்டங்கள், இயற்கை மரணம் உதவித்தொகை, தையல் இயந்திரம் உட்பட 1.94 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள், 139 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.முகாமில், பெத்திக்குப்பம் ஊராட்சியை, கும்மிடிப்பூண்டி பேரூராட்சியுடன் இணைக்கும் அறிவிப்பை திரும்ப பெற, வலியுறுத்தி கிராம மக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ