உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  நிழற்குடையில் மலைப்பாம்பு பயணியர் அலறியடித்து ஓட்டம்

 நிழற்குடையில் மலைப்பாம்பு பயணியர் அலறியடித்து ஓட்டம்

ஆர்.கே.பேட்டை: கொண்டாபுரம் நிழற்குடையில், திடீரென 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு புகுந்ததால், அங்கிருந்த பயணியர் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். ஆர்.கே.பேட்டை ஒன்றியம், கொண்டாபுரம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து, திருத்தணி, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு மற்றும் சோளிங்கர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் மூலம் பயணியர் சென்று வருகின்றனர். இங்குள்ள நிழற்குடையில், நேற்று அதிகாலை ஐந்துக்கும் மேற்பட்ட பயணியர் பேருந்துக்காக காத்திருந்தனர். அப்போது, திடீரென 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு நிழற்குடைக்குள் புகுந்தது. இதை பார்த்த பயணியர் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடினர். தகவல் அறிந்து வந்த ஆர்.கே.பேட்டை போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர், ஒரு மணி நேரம் போராடி மலைப்பாம்பை உயிருடன் பிடித்து, வனத்துறையிடம் ஒப்படைத்தனர். பின், வனத்துறையினர் மலைப்பாம்பை எஸ்.வி.ஜி.புரம் காப்புகாட்டில் விட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை