உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கும்மிடி துணை மின் நிலையத்தில் தடுப்பு சுவர் அமைக்க கோரிக்கை

கும்மிடி துணை மின் நிலையத்தில் தடுப்பு சுவர் அமைக்க கோரிக்கை

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி துணை மின் நிலையத்திற்கும் அருகில் உள்ள கால்வாய்க்கும் இடையை தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கும்மிடிப்பூண்டி ஜி.என்.டி., சாலையில், துணை மின் நிலையம் உள்ளது. அங்கிருந்து கும்மிடிப்பூண்டி நகர் பகுதி மற்றும் சுற்றியுள்ள, 30க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளுக்கு மின் வினியோகம் செய்யப்படுகிறது.துணை மின் நிலையத்தை ஒட்டி, ஏரிகளின் உபரி நீர் கால்வாய் செல்கிறது. மழைக்காலங்களில், அந்த கால்வாயில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் போது, துணை மின் நிலையத்தில் மழை வெள்ளம் சூழந்து விடும். மழை வெள்ளம் வடியும் வரை, மின் வினியோகம் செய்ய முடியாத நிலை ஏற்படும்.துணை மின் நிலையத்தின் பாதுகாப்பு மற்றும் மக்களின் நலன் கருதி, கால்வாய்க்கும் துணை மின் நிலையத்திற்கும் இடையே தடுப்பு சுவர் அமைக்க வேண்டும். அடுத்து வரும் மழைக்காலத்திற்குள் அதற்கு உண்டான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ