உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மீஞ்சூர் - வண்டலுார் வெளிவட்ட சாலை வழித்தடத்தில் பேருந்து இயக்க கோரிக்கை

மீஞ்சூர் - வண்டலுார் வெளிவட்ட சாலை வழித்தடத்தில் பேருந்து இயக்க கோரிக்கை

மீஞ்சூர்:மீஞ்சூர் - வண்டலுார் இடையே, 62கி.மீ., தொலைவிற்கு வெளிவட்ட சாலை அமைக்கபட்டு, கடந்த, 2022ல் இருந்து பயன்பாட்டில் உள்ளது.இந்த வெளிவட்ட சாலை மீஞ்சூரில் துவங்கி சீமாவரம், அருமந்தை, சோழவரம், செங்குன்றம், பூந்தமல்லி, பட்டாபிராம், ஆவடி, நெமிலிச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் வழியாக வண்டலுார் வரை பயணிக்கிறது.இதில் மீஞ்சூர், அத்திப்பட்டு பகுதிகளை சேர்ந்தவர்கள், மேற்கண்ட மீஞ்சூர் - வண்டலுார் வழித்தடத்தில் உள்ள பகுதிகளுக்கு பணிக்கு சென்று வருகின்றனர்.தற்போது, பேருந்தில் பயணிப்பவர்கள், மீஞ்சூரில் இருந்து பொன்னேரி வழியாக செங்குன்றம் சென்று அங்கிருந்து மாற்று பேருந்துகளில் பயணிக்கின்றனர்.புறநகர் ரயில்களில் செல்பவர்கள் சென்னை சென்ட்ரல் அல்லது பீச் ஸ்டேஷன் சென்று அங்கிருந்து மாற்று ரயில்களில் பயணிக்கும் நிலையில் உள்ளது.இதனால் காலவிரயம் மற்றும் கூடுதல் போக்குவரத்து செலவினங்கள் ஏற்படுகிறது. புதியதாக அமைக்கப்பட்டுள்ள மீஞ்சூர் ----- வண்டலுார் இடையேயான வெளிவட்ட சாலை, பல்வேறு பகுதிகளை இணைப்பதால், அந்த வழித்தடத்தில் மாநக பேருந்துகளை இயக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை