உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சிப்காட் - மாதர்பாக்கம் தடத்தில் அரசு பேருந்து இயக்க கோரிக்கை

சிப்காட் - மாதர்பாக்கம் தடத்தில் அரசு பேருந்து இயக்க கோரிக்கை

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில் இருந்து பாத்தப்பாளையம் வழியாக மாதர் பாக்கம் வரை அரசு பேருந்து இயக்க வேண்டும் என, தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில், 220 தொழிற்சாலைகள் இயங்கி வரு கின்றன. இந்த தொழிற் சாலைகளில், கும்மிடிப்பூண்டி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, ஆயிரக்கணக்கானோர் வேலைக்கு வந்து செல்கின்றனர். கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் பகுதியில் உள்ள, 25க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து வரும் தொழிலாளர்கள், போதிய பேருந்துகள் இல்லாமல் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும், பெண் தொழிலாளர்கள் தினமும் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இதனால், கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில் இருந்து பாத்தப்பாளையம், ஈகுவார்பாளையம் வழியாக, மாதர்பாக்கம் வரை காலை - மாலை நேரத்தில் பேருந்து இயக்க தமிழக அரசு முன் வர வேண்டும் என, தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை