உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / அரசு பள்ளி கட்டடம் புதுப்பிக்க வேண்டுகோள்

அரசு பள்ளி கட்டடம் புதுப்பிக்க வேண்டுகோள்

பொன்னேரி:பொன்னேரியில் அரசு மகளிர் பள்ளி கட்டடங்களை புதுப்பிக்க வேண்டுமென, பெற்றோர் வேண்டு கோள் விடுத்துள்ளனர். பொன்னேரி வேண்பாக்கம் பகுதியில் உள்ள, அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 2,000க்கும் அதிகமான மாணவியர் பயில்கின்றனர். இங்குள்ள வகுப்பறை கட்டடங்கள் உரிய பராமரிப்பு இன்றி கிடக்கின்றன. கட்டடங்களின் வர்ணம் மங்கியும், ஆங்காங்கே விரிசல்கள் ஏற்பட்டும் இருப்பதுடன், சிமென்ட் பூச்சும் கொட்டுகிறது. இதனால் மாணவியர் அசம்பாவிதங்களில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும், மாணவியருக்கு போதுமான, கழிப்பறைகள் இல்லை. பள்ளி வளாகத்தின் பல்வேறு பகுதிகளில் புதர்கள் சூழ்ந்து இருக்கின்றன. மாணவியரின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் கருதி, வகுப்பறை கட்டடங்களை புதுபிக்கவும், கூடுதல் கழிப்பறைகளை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ