உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / இரும்பு மின்கம்பங்களில் ஷாக் போந்தவாக்கத்தினர் மாற்ற கோரிக்கை

இரும்பு மின்கம்பங்களில் ஷாக் போந்தவாக்கத்தினர் மாற்ற கோரிக்கை

ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை அருகே, போந்தவாக்கம் ஊராட்சியில் உள்ள காலனியில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இவர்களின் முக்கிய தொழில் விவசாயம் மற்றும் கூலி வேலைக்குச் செல்வது. இப்பகுதியில் உள்ள மின்கம்பங்கள் சில இரும்பால் ஆனது உள்ளது.மழைக்காலங்களில் இந்த மின்கம்பங்களில், 'ஷாக்' தெரிவதாக அப்பகுதியினர் கூறுகின்றனர். இதுகுறித்து ஊத்துக்கோட்டை மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.எனவே, மாவட்ட மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, போந்தவாக்கம் காலனியில் உள்ள இரும்பு மின்கம்பங்களை மாற்ற வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி