உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  கழிவுநீரால் குளமாக மாறிய சாலை; காரனோடை மக்கள் கலெக்டரிடம் மனு

 கழிவுநீரால் குளமாக மாறிய சாலை; காரனோடை மக்கள் கலெக்டரிடம் மனு

திருவள்ளூர்: கழிவு நீர் குளமாக மாறிய காரனோடை அம்பேத்கர் நகர் சாலையை சீரமைத்து: சோழவரம் ஒன்றியம் காரனோடை கிராம மக்கள், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று அளித்த மனு: காரனோடை ஊராட்சிக்கு உட்பட்ட அம்பேத்கர் தெரு, பச்சையம்மன் நகர், ஜிம்போ கார்டன் உள்ளிட்ட பகுதிகளில், 300க்கும் மேற்பட்ட வீடுகளில், 800க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன், இப்பகுதிக்கு சாலை வசதி இல்லாததால், வயல்வெளிகளில் நடந்து சென்று வந்தனர். பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, 1996ல் அம்பேத்கர் நகரில் சாலை அமைக்கப்பட்டது. இந்நிலையில், அப்பகுதியைச் சுற்றிலும் உள்ள வயல்வெளிகள், காலப்போக்கில் வீட்டுமனைகளாக மாறி, அங்கு குடியிருப்புகள் அதிகளவில் வந்துவிட்டன. கழிவுநீரை சாலையில் விடுவதால் சேதமடைந்து, பள்ளமாக மாறியுள்ளது. மேலும், மழைக்காலத்தில் வெள்ள நீர் சூழ்ந்து, சாலையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மேலும் மழைநீருடன், கழிவுநீரும் கலந்து விடுவதால், துர்நாற்றம் வீசி, அப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. இச்சாலையை பயன்படுத்த முடியாததால், அம்பேத்கர் நகர் மக்கள், ஊரை சுற்றிவர வேண்டிய நிலை உள்ளது. எனவே, அம்பேத்கர் நகர் பிரதான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ