உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  ஆவணமின்றி எடுத்து வந்த ரூ.1.20 லட்சம் பறிமுதல்

 ஆவணமின்றி எடுத்து வந்த ரூ.1.20 லட்சம் பறிமுதல்

திருவள்ளூர்: திருவள்ளூரில் உரிய ஆவணமின்றி எடுத்து வரப்பட்ட 1.20 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது . திருவள்ளூர் மணவா ளன் நகர் ஜங்ஷன் பகுதியில், தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் போலீசார் நேற்று மாலை வாகன சோதனையி ல் ஈடுபட்டனர். அப்போது, கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த சுகுமாறன், 40, என்பவர் உரிய ஆவணமில்லாமல், 1.20 லட்சம் ரூபாயை இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்றது தெரிய வந்தது. பணத்தை பறிமுதல் செய்த போலீசார், திருவள்ளூர் ஆர்.டி.ஓ., ரவிச்சந்திரனிடம் ஒப்படைத்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ