உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஏழு தாசில்தார்கள் பணியிட மாற்றம்

ஏழு தாசில்தார்கள் பணியிட மாற்றம்

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில், ஏழு தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.திருவள்ளூர் மாவட்டத்தில், வருவாய் துறையில் பணிபுரியும் தாசில்தார்கள், அவ்வப்போது நிர்வாக வசதிக்காக பணியிட மாற்றம் செய்வது வழக்கம்.அதன்படி, தற்போது மாவட்டத்தில் ஏழு தாசில்தார்கள் அதரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.பூந்தமல்லி சமூக பாதுகாப்பு திட்டம், தனி தாசில்தார் சரஸ்வதி, பூந்தமல்லி தாசில்தாராகவும், அங்கிருந்த கோவிந்தராஜ், திருவள்ளூர் 'ஆர்பிட்ரேஷன்' தாசில்தாராகவும் மாற்றப்பட்டுள்ளார். அங்கிருந்த தாசில்தார் காந்திமதி, பூந்தமல்லி சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார்.சென்னை வெளிவட்ட சாலை நிலம் எடுப்பு - அலகு 4 - தனி தாசில்தார் பாரதி, பள்ளிப்பட்டு தாசில்தாராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.சென்னை வெளிவட்ட சாலை நிலம் எடுப்பு - அலகு 5 - தனி தாசில்தார் பிரேமி, அலகு 4ல் கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்பட்டு உள்ளார்.திருமழிசை டாஸ்மாக் கிடங்கு - 1 தனி தாசில்தார் கோமதி, திருவள்ளூர் மதுபான கிடங்கு, கலால் மேற்பார்வையாளராகவும், அங்கிருந்த தனி தாசில்தார் வெங்கடேஷ், திருமழிசைக்கும் இடம் மாற்றம் செய்யப்பட்டு, கலெக்டர் பிரதாப் உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி