உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  தொழிலாளர் குழந்தைகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

 தொழிலாளர் குழந்தைகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

திருவள்ளூர்: தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு, திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பொன்னேரி தொழிலாளர் உதவி ஆணையர் செல்வராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களின் குழந்தைகள், பொறியியல், கலை மற்றும் அறிவியல் ஆகிய படிப்புகளில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்பதற்கு, கல்வி உதவித்தொகை பெற்றிருந்தாலும், விண்ணப்பித்திருந்தாலும், அவர்களுக்கு இணையவழியில் 40 பிரிவுகளில் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட உள்ளது. ஒரு குடும்பத்தில் இரண்டு குழந்தைகள் மட்டுமே பயிற்சி பெற முடியும். பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர், பெற்றோரின் நலவாரிய அடையாள அட்டை எண் மற்றும் நலவாரிய அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல்போன் எண் ஆகியவற்றுடன், https://application.tnbocw.com/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை