துாய்மை பணியாளருக்கு திறன் வளர் பயிற்சி
திருவள்ளுர்: ஆவடி மாநகராட்சி தற்காலிக துாய்மை பணியாளர்களுக்கு, திறன் வளர் பயிற்சி வழங்க, திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் அறிவுறுத்தினார். திருவள்ளுர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று, 'தாட்கோ' சார்பில், ஆவடி மாநகராட்சி தற்காலிக துாய்மை பணியாளர் சங்க உறுப்பினர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடந்தது. கலெக்டர் பிரதாப் தலைமை வகித்து, துாய்மை பணியாளர்களுக்கு, தொழில் முனைவு மேம்பாடு மற்றும் திறன் வளர் பயிற்சி வழங்க, தேவையான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். கூட்டத்தில், திருவள்ளூர் மாவட்ட தாட்கோ மேலாளர் சரண்யா, தமிழக அரசு துாய்மை பணியாளர் நல வாரிய உறுப்பினர் அரிஷ் குமார், ஆவடி மாநகராட்சி அலுவலர் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.