மேலும் செய்திகள்
பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
24-May-2025
ஆர்.கே.பேட்டை:அம்மையார்குப்பத்தில், பெற்றோரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை, போலீசார் கைது செய்தனர்.ஆர்.கே.பேட்டை அடுத்த அம்மையார்குப்பம், கன்னியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர்கள் ராஜாமணி, 50, லட்சுமி தம்பதி. இவர்களின் மகன் பிரகாஷ், 27, என்பவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. போதையில் வீட்டிற்கு வரும் பிரகாஷ், பெற்றோரிடம் சண்டை போட்டு தகராறு செய்வது வழக்கம். நேற்று முன்தினம் மதுபோதையில் இருந்த பிரகாஷ், அவரது பெற்றோரிடம் தகராறில் ஈடுபட்டார்.இதில், லட்சுமியை அடித்து கீழே தள்ளினார். ராஜாமணியையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து ராஜாமணி, ஆர்.கே.பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பிர்காஷை கைது செய்த போலீசார், சிறையில் அடைத்தனர்.
24-May-2025