உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  மூத்த தம்பதிகளை கவுரவிக்கும் சிறப்பு திட்டம்

 மூத்த தம்பதிகளை கவுரவிக்கும் சிறப்பு திட்டம்

திருத்தணி: மூத்த தம்பதிகளை கவுரவிக்கும் சிறப்பு திட்டத்தில் பயன்பெற முன்பதிவு செய்து கொள்ளலாம் என, திருத்தணி முருகன் கோவில் இணை ஆணையர் ரமணி அறிவித்துள்ளார். திருத்தணி முருகன் கோவில் நிர்வாகம் சார்பில், 70 வயதுக்கு மேல் உள்ள மூத்த தம்பதிகளை கவுரவிக்கும் சிறப்பு திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் தகுதி வாய்ந்த பயனாளிகள் முன்பதிவு செய்து கொள்ளலாம். இதில், தேர்வு செய்யப்படும் மூத்த தம்பதிகளுக்கு, 2,500 ரூபாய் மதிப்பிலான சீர்வரிசை பொருட்கள் வழங்கி கோவில் நிர்வாகம் கவுரவிக்க உள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் மூத்த தம்பதிகள், தகுந்த ஆவணங்களுடன் கோவில் அலுவலகத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என, இணை ஆணையர் ரமணி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை