உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தாசரதி கல்யாண ராமர் கோவிலில் வரும் 6ல் ஸ்ரீராம நவமி உற்சவம்

தாசரதி கல்யாண ராமர் கோவிலில் வரும் 6ல் ஸ்ரீராம நவமி உற்சவம்

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியம் செஞ்சி பானம்பாக்கம் ரயில் நிலையம் அருகே உள்ள ராமன் கோவில் ஊராட்சியில், சீதா லட்சுமண ஹனுமத் சமேத தாசரதி கல்யாண ராமர் கோவில் அமைந்துள்ளது.இங்கு, ராம நவமி உற்சவ விழா, வரும் 6ம் தேதி காலை 7:30 முதல் 9:00 மணிக்குள் கொடியேற்றத்துடன் துவங்கி, 16ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது. தினமும் மாலை 5:00 முதல் 7:30 மணி வரை உற்சவர் புறப்பாடும், வீதியுலாவும் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சீதா கல்யாணம் மற்றும் ராமர் பட்டாபிஷேகம், வரும் 14, 15ம் தேதி மாலை 6:00 முதல் 7:30 மணிக்குள் நடைபெறும். வரும் 16ம் தேதி விடையாற்றியுடன் ராமநவமி உற்சவ திருவிழா நிறைவு பெறும் என, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

நாள் உற்சவம்

ஏப்., 6 கொடியேற்றம்7 பெயர் சூட்டு விழா 8 வில்வித்தை9 சேஷசயனம்10 சபரி மோட்சம்11 வாலி மோட்சம்12 சீதா தரிசனம் 13 அனுமன் துாது14 ராமர் பட்டாபிஷேகம்16 விடையாற்றி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !