உங்களுடன் ஸ்டாலின் முகாம் மெய்யூர் மக்கள் புகார் மனு
ஊத்துக்கோட்டை:'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில், மெய்யூர் ஊராட்சி, வேட்டைக்கார தெருவில் குடிநீர் பற்றாக்குறை உள்ளதாக, அப்பகுதி மக்கள் மனு அளித்தனர். ஊத்துக்கோட்டை அடுத்த மெய்யூர் கிராமத்தில், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நடந்தது. இதில், மெய்யூர், ராஜபாளையம், வெம்பேடு, தேவந்தவாக்கம், சோமதேவன்பட்டு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பங்கேற்று மனு அளித்தனர். அப்போது, மெய்யூர், வேட்டைக்கார தெரு மக்கள் அளித்த மனுவில், 'மெய்யூர் ஊராட்சி, வேட்டைக்கார தெருவில் குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது. இதுகுறித்து, யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. நடவடிக்கை எடுத்து, குடிநீர் பிரச்னையை தீர்க்க வேண்டும்' என்றனர். மனுவை பெற்ற மாவட்ட பொறுப்பாளர் ரமேஷ்ராஜா, 'சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி, உடனடியாக குடிநீர் பிரச்னை தீர்க்கப்படும்' என்றார்.