கடன் வாங்கி விவசாயம் செய்து நஷ்டம் ஏற்பட்டதால் தற்கொலை
மீஞ்சூர்:பொன்னேரி அடுத்த வேளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துராஜ், 65; விவசாயி. இவர், கடன் பெற்று விவசாயம் செய்து வந்த நிலையில், அதில் எதிர்பார்த்த வருவாய் கிடைக்காமல் நஷ்டம் ஏற்பட்டது.இதனால், கடந்த சில நாட்களாக மனஉளைச்சலில் இருந்து வந்துள்ளார். நேற்று அதிகாலை வீட்டின் குளியலறைக்கு சென்றவர், மனைவியின் சேலையால் துாக்கு போட்டுக் கொண்டார்.நீண்டநேரம் குளியல் அறை கதவு திறக்காத நிலையில், சந்தேகமடைந்த மனைவி சென்று பார்த்தபோது, முத்துராஜ் துாக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடப்பது தெரிந்தது.இதுகுறித்து காட்டூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு சென்று, முத்துராஜின் உடலை கைப்பற்றி, பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து வழக்கு பதிந்த காட்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டத்தால் விவசாயி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், வேளூர் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.